கணவன் அடித்ததாக ஒப்பாரி வைத்த மனைவி - தாங்க முடியாமல் கணவனை அடித்தே கொன்ற கள்ள காதலன்
கணவன் அடித்ததாக ஒப்பாரி வைத்த மனைவி - தாங்க முடியாமல் கணவனை அடித்தே கொன்ற கள்ள காதலன்
சென்னை பெரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியர் வெட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள எழில் நகரில் வசித்து வந்த பழனிச்சாமி என்பவர் கடந்த 19ம் தேதி பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவதன்று கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில், பழனிசாமி தனது மனைவியை தாக்கியதும், இதனால் வீரலட்சுமி தனது கள்ளகாதலனிடம் இது குறித்து கூறிவிட்டு மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவந்தது. மேலும் பைக்கில் சென்ற பழனிசாமியை, வீரலட்சுமியுடன் தகாத உறவில் இருந்த செம்மஞ்சேரியை சேர்ந்த அசோக்குமார் கல்லால் அடித்து கொலை செய்ததும் அம்பலமானது.