``ஏன் ஆளு மேலயே கை வைப்பியா’’ - பஸ்ஸில் தாடையை உடைத்து உருவத்தையே மாற்றிய காதலன்

Update: 2025-08-02 09:28 GMT

பேருந்தில் தாக்குதல்...புகார் கொடுக்க 12 மணி நேரம் காத்திருந்த பெண்

சென்னையில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்து 12 மணி நேரம் காத்திருந்தும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மின்ட் - கோயம்பேடு வழிதடத்தில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்தில் பயணித்த பெண்கள் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பெண்ணுடன் இருந்த காதலன், அந்தப் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில், தாக்கிய நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்