"யாருனு நினைச்ச.. அ*த்து போட்ருவேன்.." | ஓசி டீக்காக மல்லுக்கட்டிய ரவுடிகள்
திருப்பத்தூரில் ஓசி டீ கேட்டு ரவுடிகள் அட்டகாசம்
திருப்பத்தூரில் கத்தியை காட்டி ஓசி டீ கேட்டு ரவுடிகள் அட்டகாசம் செய்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு இம்தியாஸ் என்பவர் டீ மாஸ்டராக பணிபுரிந்து வரும் நிலையில் போதையில் ஓட்டலுக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓசியில் டீ கேட்டுள்ளனர்.. அதனை தர மறுக்கவே, டீ மாஸ்டரை தாக்கிவிட்டு, பைக் மற்றும் பட்டா கத்தியை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.