CM ஸ்டாலின் டிஸ்சார்ஜ் எப்போது? - உதயநிதி ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்

Update: 2025-07-22 01:59 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தொடர்ச்சியான பயணங்களால் முதல்வருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வரை 2 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.   

Tags:    

மேலும் செய்திகள்