"போன வருஷம் என்ன நடந்துச்சு.? அதுதான் நடக்கும்.." - பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

Update: 2025-07-24 02:33 GMT

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கோரி பக்தர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்தள்ளது. இங்கு ஆடி அமாவாசை வழிபாடு கொண்டாடப்பட உள்ள நிலையில், பக்தர்களுக்கு காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி கேட்டு பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்