வெல்டிங் மெஷின் தீப்பற்றி, வெல்டர் படுகாயம்.. சென்னையில் சோகம்

Update: 2025-07-26 02:13 GMT

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் வணிகவளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் வெல்டர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் பிரபல வணிகவளாகம் ஒன்றில், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவுப்பணி முடிந்து அங்கேயே தூங்கியவர், காலையில் வேலையை தொடங்கிய போது, வெல்டிங் மெசின் எதிர்பாராத விதமாக தீப்பற்றி அவரது முகம் மற்றும் உடல் பகுதியில் தீப்பற்றியது. படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்