"துளியும் சமரசமின்றி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவோம்" பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-06-01 12:10 GMT

நமது மண், மொழி, மானம் காத்திடவும், தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைந்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளதாக குறிப்பிட்டார். துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ்நாடு" என உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்று பொதுக்குழு தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க உறுப்பினர்களாக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்