Viral Video | Bus issue | உனக்கு என்ன தகுதி இருக்கு... பஸ்ஸில் பெண்ணை ஒருமையில் பேசிய நபர்

Update: 2025-03-10 02:22 GMT

தக்கலை பகுதியில் இருந்து அருமனை நோக்கி சென்ற மகளிர் மட்டும் இலவச அரசு பேருந்தில் பெண்கள் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு பெண் பேருந்தின் கடைசி பகுதியில் காலியாக இருந்த ஆண்கள் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது, அந்த பெண் அருகில் இருந்த நபரை சற்று விலகி இருக்க கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணை ஒருமையில் பேசி உள்ளார். அதற்கு கொஞ்சமும் சளைக்காத அந்த பெண் எதிர்த்து அவரை ஒருமையில் பேசியதோடு தோழியிடம் செல்போனை வாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை சுதாரித்துக்கொண்ட அந்த நபர் பேருந்தில் பொட்டிபாம்பாக அடங்கி சத்தமின்றி இருந்துள்ளார். தற்போது, அரசு பேருந்தில் பெண்ணை, ஆண் ஒருவர் வம்பிழுத்து ஒருமையில் பேசியதை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலாக பரவி காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்