அரசு பேருந்தில் இப்படியொரு சம்பவமா? - அதிர்ச்சி பின்னணி | viluppuram

Update: 2025-02-20 09:10 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், மூட்டை மூட்டையாக அரசுப் பேருந்தில் மதுபாட்டில்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூரிலிருந்து வேலூர் சென்ற அரசுப் பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டன. இதுதொடர்பாக அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த நவீன், அரசு பேருந்து நடத்துனர் சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 153 புதுச்சேரி மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்