லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி.. சாமானியன் செய்த தரமான சம்பவம்

Update: 2025-03-19 03:55 GMT

விழுப்புரத்தில் இறப்பு பதிவு இல்லா சான்று வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி துப்புரவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். காக்குப்பத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவர், தனது தந்தையின் இறப்பு பதிவு இல்லா சான்று கேட்டு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதன்குமாரை அணுகினார். அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த காத்தமுத்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்த்தார். பின்னர், போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மதன்குமாரிடம் காத்தமுத்து கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்