ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமத்தலைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ் மங்கலம் அருகே குயவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் கிராமத் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் காசிலிங்கத்தை தேடி சென்ற போது காட்டுப் பகுதியில் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து காசிலிங்கத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.