"டிமார்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்" - தேதியை அறிவித்தார் விக்கிரமராஜா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், வியாபாரிகள் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது விக்கிரமராஜா, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் டி மார்ட் நிறுவனத்தின் முன்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி பெரும் போராட்டம் நடத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பேசியவர் இந்திய நாட்டின் மீது பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் அமெரிக்க பொருட்களை புறக்கணித்து, உள்ளூர் வணிகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார்.