விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் இடம்பெறும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்புக்குப் பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.