Airport | Police | நடுவானிலே துடிதுடித்து மரணம்.. சடலமாக வந்த பெண்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
பிஜி நாட்டில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பிஜி நாட்டில் வசிக்கும் இந்தியரான சதாசிவன், தனது மனைவி நளினி ரஞ்சனி தேவியை மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக இருவரும் மலேசியா வந்து, அங்கிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென நளினி ரஞ்சனி தேவிக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை சென்னை விமான நிலைய போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.