Cuddalore | கடலூரில் அடுத்த அதிர்ச்சி... தனியார் பேருந்து திடீர் விபத்து - அலறிய பயணிகள்

Update: 2026-01-24 10:20 GMT

கடலூரில் அடுத்த அதிர்ச்சி... தனியார் பேருந்து திடீர் விபத்து - அலறிய பயணிகள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனியார் பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது...

டிராக்டர் குறுக்கில் வந்ததால் ஓட்டுநர் பிரேக் அடித்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது...

தனியார் பேருந்து மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கடலூர் மற்றும் பண்ருட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

இன்று காலை கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், மேலும் ஒரு விபத்து நேர்ந்துள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்