மதுரையில் தெப்பத் திருவிழாவின்போது, ஆட்சியர் காரை மறித்து த.வெ.க கொடியை காட்டி விஜய் ரசிகர் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள், தெப்பக்குளத்தை சுற்றி சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் கார் சென்றது. அப்போது, விஜய் ரசிகர் ஒருவர் திடீரென, த.வெ.க கொடியை காண்பித்து அங்குமிங்கும் குதித்துக் கொண்டே இருந்தார். இச்செயலை பார்த்த பக்தர்கள் முகம்சுளித்தனர்.