வேங்கை வயல்... ``CBI வேண்டாம்; SIT தான் வேண்டும்..'' - கவனம் ஈர்த்த விஜய்யின் யோசனை
விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டால், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும் என்றும், இது வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற வேங்கைவயல் சம்பவத்தில், உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.