Vellore | ஊரே பார்க்க சேற்றில் உருண்டு அங்க பிரதட்சணம் - அதிரவைத்த கவுன்சிலர்
Vellore | ஊரே பார்க்க சேற்றில் உருண்டு அங்க பிரதட்சணம் - அதிரவைத்த கவுன்சிலர்மாநகராட்சியை கண்டித்து சேறும் சகதியுமான ரோட்டில் அங்க பிரதட்சணம் செய்த கவுன்சிலர்
வேலூர் மாநகராட்சி 4 - வது மண்டலத்துக்குட்பட்ட தொரப்படி 49 வது வார்டுக்கு தற்போது வரை சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி, சேரும் சகதியுமாக மாறியதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 49 வது வார்டு கவுன்சிலர் லோகநாதன், சேறும் சகதியுமான சாலையில், மழை நீரில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த மேயர் சுஜாதா பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.