Vellore | Police | யானை தந்தங்கள் விற்க முயற்சி.. வசமாக சிக்கியஇளைஞர்கள்..
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சாரங்கல் வனப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்ட போது, சந்தேக நபரை பிடித்து விசாரித்ததில் இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இதே வனப்பகுதியில் ஐந்து யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.