பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்காரம் - கைதான சிறுவனுக்கு கோர்ட் கொடுத்த தண்டனை

Update: 2025-02-19 03:06 GMT

வேலூரில் கடந்த 2022ம் ஆண்டு பெண் மருத்துவர் கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சிறாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் கைதான 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகிளா விரைவு நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், குற்றம் நிரூபணம் ஆனதால் ஐந்தாவது நபரான சிறாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்