வேளாங்கண்ணி பகுதியில் கிளிக்கு மாற்றாக சீமை எலி மற்றும் இதர பறவைகளை வைத்து ஜோதிடம் பார்க்கும் முறையை ஜோதிடர்கள் கையாண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கிளி ஜோதிடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சீமை எலி, கண்ணூர் பைனாப்பிள் குருவி, காற்றிலி கொண்டை குருவி ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்து ஜோதிடம் பார்க்கும் முறை தற்போது அறிமுகமாகியுள்ளது.