நிற்காமல் சென்ற தனியார் பேருந்து - இளைஞர்கள் செய்த செயல்..அதிர்ச்சி வீடியோ

Update: 2025-06-20 04:22 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் சிலர், ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற தனியார் பேருந்தை, உத்தாணி என்ற பகுதியில் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூருக்கு சென்று விட்டு மீண்டும் அந்த வழியாக வந்த பேருந்தை இளைஞர்கள் சிலர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரை தாக்க முயன்றதுடன், அவரை ஆபாச வார்ததைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்