நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சுப்பிரமணி என்ற இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுப்பிரமணி போக்சோவில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு இளைஞர் சுப்பிரமணிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 4 லட்சம் ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளது.