snatched gold chain || மூதாட்டியிடம் தங்க செயின் பறித்த இருவர் - போலீஸ் வலைவீச்சு

Update: 2025-06-16 04:16 GMT

சென்னை அண்ணா நகரில் இரவில் தனியாக நடந்துச் சென்ற மூதாட்டியிடம் இரண்டு சவரன் தங்கச் செயினை வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அண்ணா நகர் 'ஒய்' பிளாக் 5-வது குறுக்குத் தெருவில் வசிக்கும் 73 வயது மூதாட்டியான ஜெயலட்சுமி, கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது அவரைத் தாக்கி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் போலீசார், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்