லைசன்ஸ் கேட்ட TTF வாசன் - அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

Update: 2025-08-13 02:52 GMT

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி ரத்து செய்யப்பட்ட தனது வாகன ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப். வாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி டிடிஎஃப். வாசனின் ஓட்டுநர் உரிமத்தை பத்து ஆண்டுகளுக்கு ரத்து, செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கடந்த 2023ம் அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அந்த மனு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது.

தனது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதால், புதிய லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டுமென டிடிஎஃப். வாசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றில்லை, உரிய அதிகாரிகளை அணுகலாம் எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்