நீர் தொட்டியில் மலம் வீசப்பட்டதா? - மக்கள் அச்சம் | #Trichy | #Watertank | #ThanthiTV
திருச்சி மாநகரின் 20 வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் போடப்பட்டதா? என குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். கவுன்சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், நீர் தொட்டியை சுத்தம் செய்து குளோரின் பவுடரை போட்டுச் சென்றுள்ளனர். காவல் துணை ஆணையர் சிவராமன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற குற்றச்செயல்களை தடுக்க முடியும் என 20வது வார்டு குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.