தைப்பூச திருவிழா... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன் | Trichy

Update: 2025-02-08 12:34 GMT

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளில் யானை வாகனத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தைப்பூச திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் ஆறாம் நாளில் உற்சவ அம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று மகா தீபாதாரனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் மர யானை வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்