Trichy Commissioner Viral Audio | ஓபன் மைக்கில் ஓபனாக பேசிய திருச்சி கமிஷனர் - வைரலாகும் ஆடியோ

Update: 2025-08-07 09:10 GMT

உதவி ஆணையரை கடுமையாக பேசிய திருச்சி காவல் ஆணையர் - வெளியான ஆடியோ

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஓபன் மைக்கில், உதவி ஆணையரை கடுமையாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பணிக்கு அதிகாரி இல்லாதபோது, அந்த வேலையையும் நீங்கள்தான் சேர்த்து செய்ய வேண்டும் என்றும், நீங்கள் சம்பளம் வாங்கவில்லையா என்றும் காவல்ஆணையர் உதவி ஆணையர் முகமதுரபியிடம் பேசியுள்ளார். மேலும் இரவுநேர பணி இருந்தாலும், மற்ற பணிகளையும் சேர்த்து பார்த்தாக வேண்டும் என்று கடுமையாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வரும் இந்த ஆடியோவை யார் வெளியிட்டது என்ற தீவிர விசாரணை நடந்து வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்