Collector Uma | டிரான்ஸ்பர் செய்யப்பட்ட கலெக்டர் உமா - தாங்க முடியாமல் கதறி அழுத திருநங்கைகள்
பணி மாறுதல் செய்யப்பட்ட நாமக்கல் ஆட்சியரை பார்த்து, கண்ணீர் விட்டு திருநங்கைகள் அழுததும், ஆட்சியரும் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளதால் அதிகாரிகள், பொதுமக்கள் சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். அப்போது, திருநங்கைகள் பலர், தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தியது நீங்க தான், நீங்க நல்லா இருக்க வேண்டும் எனக்கூறி கண்ணீர் விட்டு அழுதனர். இதைப்பார்த்த ஆட்சியர் உமாவும் கண்கலங்கினார். உடனே, நீங்க அழாதீங்க எனக்கூறிய திருநங்கைகள், ஆட்சியர் உமாவுடன் செல்பி எடுத்துக்கொண்டு வாழ்த்தினர்.