ரயில் டிக்கெட் முன்பதிவு... ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை! | Train ticket Booking
ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் புரோக்கர்களின் ஊடுருவலை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கண்டறிய முடியாத பல்வேறு வழிகள் மூலம் புரோக்கர்கள் பயண சீட்டு பதிவு செய்வதை தடுக்க கருவி கற்றல் முறை பயன்படுத்தப்படுகிறது. வரும் காலங்களில் மோசடிகளை தடுக்க முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருகிறது.