திடீரென என்ட்ரி கொடுத்த புலி..சாலையை கடக்க விடாமல் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..
உதகை அருகே உள்ள மாயார் கிராமத்திற்கு செல்லும்
சாலையை கடக்க முயன்ற புலியை சுற்றுலா பயணிகள் அருகில் கண்டு ரசித்த காட்சி வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் புலி நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகள் மாயார் கிராமத்திற்கு செல்லும் போது சாலையை கடக்க முயன்ற கம்பீரமான புலியை மிக அருகில் கண்டு பரவசமடைந்துள்ளனர். அப்போது வாகனத்தின் அருகே வந்த புலி செடிகளுக்குள் மறைந்து அமர்ந்து கொண்டது. சிறிது நேரம் அமர்ந்திருந்த புலி மெதுவாக எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் கம்பீரமாக நடந்து சென்றது. புலியை மிக அருகில் பார்த்த சுற்றுலா பயணிகள், அதை வீடியோ பதிவு செய்துள்ளது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.