சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 71 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து, 8 ஆயிரத்து 990 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.