Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (16.08.2025) | Thanthi TV

Update: 2025-08-16 15:27 GMT

சென்னையில் ரயில் புறப்படும்போது யாருடைய துணையுமின்றி மூன்று வயது குழந்தையை ஒருவர் தனியாக இறக்கிவிட்டு சென்ற காட்சி மனதை நொறுக்கி உள்ளது.

கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணித்த நபர், அதிகாலை 4:30 மணியளவில் சானிடோரியம் ரயில் நிலையத்தை குழந்தையை கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார்.

சென்னை மற்றும் திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார், மகள் இந்திரா மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் இல்லம், திண்டுக்கல்லில் உள்ள இல்லத்திலும் சோதனை நடத்தினர். சென்னையில் 9 மணி நேரம் நடந்த சோதனையில் பூட்டிய அறையில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில் நடந்த அமலாக்கத்துறை சோதனை 11 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்