Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2025) | 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-09-17 14:16 GMT
  • பெரியார், அண்ணா பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாளை, முப்பெரும் விழாவாக கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில், கோலாகலமாக திமுக கொண்டாடி வருகிறது...
  • திறந்த வாகனத்தில் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பட்டாசு வெடித்தும், ஆரவாரம் எழுப்பியும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...
  • நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்ம‌புரி, சேலம், திருவண்ணாமலை உட்பட 21 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • பெரியாறு பாசனப் பகுதி விவசாயத்திற்காக வைகை அணையில் நாளை நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது...
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் வண்ணப் புகைப்படம் ஆகியவை இடம்பெறும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது....
  • “தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்கிட வேண்டும்“...
  • பாமகவில் நடைபெறும் உள்கட்சி விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பாமக எம்எல்ஏ அருள் புகார் அளித்தார்...  
  • தவெக தலைவர் விஜய் வரும் சனிக்கிழமை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்