Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29-08-2025) | 7PM Headlines | Thanthi TV
- பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன...
- "புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
- "மாநில வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பயனளிக்காது" என்று மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்...
- "அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாக பதில் அளிக்காதது ஏன்?" என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது...
- சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்...
- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பார்க்கிங் விவகாரத்தில் மாற்று சமூக மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்...