Today Headlines | இரவு 7 மணி தலைப்புச்செய்திகள் (21.09.2025) 7 PM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது...தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது...
- தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பல மொழிகள் கற்பிக்கப்படும் நிலையில், 3வது மொழியில் மட்டும் என்ன பிரச்சினை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்... ஆர்.டி.இ. நிதியில் மாநில அரசுதான் முதன்மையான பங்களிப்பாளர் என நீதிமன்றம் கூறியிருப்பதாகவும், தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்...
- பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றில் ஒரே பயணச்சீட்டு மூலம் பயணிக்க “சென்னை ஒன்“ செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது... சென்னை ஒன் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்...
- பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றில் ஒரே பயணச்சீட்டு மூலம் பயணிக்க “சென்னை ஒன்“ செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது...சென்னை ஒன் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்...
- அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்-ஐ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்தார்... சேலம், நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்...