Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.11.2025) | 1PM Headlines | ThanthiTV
- ஆந்திராவில் மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... விஜயவாடா, காக்கிநாடா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- சாலை, தெருக்களில் சாதிய பெயர்களை நீக்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது... பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால், இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
- தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் எத்தனை?... ஒரு மாதத்தில் விவரங்களை வழங்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...
- பீகாரில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது... சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு தவறிவிட்டதாக கேரள உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது... 6 மாதங்களுக்கு முன்பே முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை? என, தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது...