இனி சிலிண்டர் பெற..`இந்த' தகவல்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!!

Update: 2025-06-08 09:44 GMT

பயோமெட்ரிக் தகவல்களை எரிவாயு நிறுவனத்துடன் பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் நிறுத்தப்படும் என தகவல் வெளியானதால் வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்தனர். இது தொடர்பாக எரிவாயு நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது பயோமெட்ரிக் தகவல்களை அளிப்பது கட்டாயம் இல்லை எனவும், ஆனால் தனி நபர்கள் மோசடியாக சிலிண்டர்களை பெறுவது, அரசு மாணியம் உள்ளிட்ட திட்டங்களில் மோசடி நடைபெறாமல் தடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் கே.ஒய்.சி எனப்படும் பயோமெட்ரிக் தகவல்களை கியாஸ் நிறுவனத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இதற்கு கால நிர்ணயம் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்