TN Gov Approves | `கிளாம்பாக்கம் திட்டத்திற்கு’ தமிழக அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் தந்து அதிரடி
கிளாம்பாக்கம் - மகேந்திரா சிட்டி இடையே ஈரடுக்கு பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தயாரித்துள்ள மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் திட்டம் கைவிடப்படும் அபாயம் இருப்பதாக தந்தி டிவியில் ஸ்பெஷல் ரிப்போர்ட்டில் பாலத்தின் முக்கியத்துவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.18.4 கிலோமீட்டர் தொலைவிற்கு 3100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டறிக்கை தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருந்தது.
ஆனால், ஓராண்டுக்கு மேலாக ஒப்புதல் கிடைக்காத நிலையில் தந்தி டிவியில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி இது தொடர்பான செய்தி ஸ்பெஷல் ரிப்போர்ட் மூலமாக வெளியிடப்பட்டது ...
இந்நிலையில், தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.