திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே, கஞ்சா போதையில், மகனை அழைத்துக் கொண்டு காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். பெங்களூர் அருகே உள்ள ராம் நகர் விடுதி பகுதியை சேர்ந்தவர் தனஞ்ஜயன். இவர் கஞ்சா போதையில் இருந்த நிலையில் தனது மகனை காரில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். இவரது உறவினர்கள் இவரை பிடிக்க மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த நிலையில், திருவண்ணாமலை அருகே அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தி தனஞ்ஜயன் தன் காரை நிறுத்தினார். இதனை தொடர்ந்து அப்பகுதியினர் காரின் கண்ணாடியை உடைத்து, அவரை தாக்க முயற்சித்தனர். பின் தொடர்ந்து வந்த போலீசார் அவரை கைது செய்து குழந்தையை காரில் இருந்து மீட்டனர். இந்த சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.