திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்து சேவை ஏற்படத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அரசு இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், புதிய அரசு விரைவு பேருந்தின் போக்குவரத்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் துவங்கி வைத்தார். திருச்செந்தூரில் மாலை 4 மணிக்கு புறப்படும் இந்தப் பேருந்து, மறுநாள் காலை 4 மணிக்கு திருத்தணி வந்து சேரும்.