திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழையானது பெய்து வந்தது இதன் காரணமாக மாநகர் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோன் வைண்டிங் நிறுவனத்திற்குள் மழை நீரானது புகுந்தது. இங்கு ஏராளமான போன் வைண்டிங் மிஷின்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. கனமழை காரணமாக அதிக அளவில் தண்ணீர் குடோனுக்குள் புகுந்ததால் வைண்டிங் மிஷின்கள் மற்றும் நூல் கோன்கள் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாத காரணத்தால் மெஷின்களும் கோண்களும் தண்ணீரில் மிதந்த வண்ணம் காணப்பட்டது. இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அதனை பழுது பார்ப்பதற்கு ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருக்கும் எனவும், நீரில் மூழ்கிய நூல் கோண்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.