திருப்பூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கார் பைக் ஸ்டண்ட் நிகழ்ச்சி. சீறிப்பாய்ந்த கார்கள். மாணவ, மாணவிகள் உற்சாகம்.
திருப்பூர் நிப்ட் டி ஃபேஷன் கல்லூரியில் திருப்பூரில் முதன்முறையாக கார் பைக் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. 30 கார்கள், 20 இருசக்கர வாகனங்கள் மூலம் வாகன சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கோவையை சேர்ந்த கார், அன்ட் பைக் ஸ்டண்ட் கிளப் மூலம் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் இந்த ஸ்டண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வகை சாகச வாகனங்களில் பல வித மாற்றங்கள் செய்து வித்தியாசமான சப்தம் மற்றும் அதிக ஆர்.பி.எம் மற்றும் சிறந்த கட்டுப்பாடு என மாணவராகளை மெய்சிலிர்க்கும் வகையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது . நிஃப்டி கல்லூரி மைதானம் முழுவதும் மண் புழுதி சூழ்ந்து மாணவர்களை மூச்சு முட்ட செய்யும் வகையில் வாகன சாகச நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் மாருதி 800 முதல் மினி கூப்பர், பி.எம்.டபுல்யு வரை கார்களும் அதிக ஆர்பிஎம் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை கொண்டு பெண்கள் ஆண்கள் என வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறுகையில்திருப்பூரில் முதல் முறையாக எங்கள் கல்லூரி நிர்வாகம் இந்த கார் ஷோ நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்களுக்காக செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், இது போன்ற கார் ஷோ மற்றும் கார்ஸ் டிரண்டுகளை தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் மட்டுமே பார்த்துள்ளோம் முதல் முறையாக எங்கள் கல்லூரியில் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பதற்கு ஒரு வித புத்துணர்ச்சியையும் தருகிறது. இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் முன்னெடுக்க வேண்டும் என்ன தெரிவித்தனர்.