பல்லடம் முருகன் சிலையை திருடிய உ.பி. நபர் - சொன்ன காரணம் தான் பகீர்

Update: 2025-03-31 04:07 GMT

மது அருந்த பணம் இல்லாத காரணத்தால், முருகன் சிலையை திருடிய வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் முருகன் கோயில் அருகே வடமாநிலத்தவர் சிலர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை அங்கித் திவாரி என்ற இளைஞரும், ஒடிசாவை சேர்ந்த பதினாறு வயது சிறுவனும் சேர்ந்து, மது அருந்த பணமில்லை என்ற காரணத்தால் அங்கிருந்த முருகன் சிலையை திருடியுள்ளனர். தற்போது அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்