சக்கரத்தில் சிக்கிய பெண்.. பாதி தூரம் இழுத்துக்கொண்டே சென்ற கார் - பார்த்தாலே நடுங்கவிடும் காட்சிகள்

Update: 2025-03-18 06:57 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் காரின் முன் பகுதியில் சிக்கிய பெண், அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கோவை நோக்கி சென்ற கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.. இதில் ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை காரணம்பேட்டை செக்போஸ்ட் பகுதியில் பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்