ரூ.12 லட்சம் கடனுக்காக ரூ.30 லட்சம் வட்டிகட்டியும் சொத்தை கேட்கும் கந்துவட்டி கும்பல்..

Update: 2025-04-23 05:38 GMT

திருப்பத்தூர் அருகே 12 லட்சம் ரூபாய் கடனுக்காக 30 லட்சம் செலுத்தியும், கடையை எழுத வற்புறுத்தும் கந்துவட்டிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கபட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த பம்பா குட்டை பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், சின்ன பசிலிகுட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் 12 லட்சம் ரூபாயை கடனாக பெற்ற நிலையில், இதுவரை 30 லட்சம் ரூபாய் வட்டி கட்டி இருக்கிறார். ஆனாலும் இன்னும் 60 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டுவதோடு, ஒன்றை கோடி மதிப்பிலான கடையை எழுதிக் கொடுக்க சொல்வதாகவும், இதனால் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெருமாள் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்