Tirupathur | தாயின் கண் முன்னே துடிதுடித்து பிரிந்த மகன் உயிர் - உடலை பார்த்து கதறிய காட்சி
தாயின் கண் முன்னே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே ஏரிக்கரையோரம் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்த தாயாரின் கண் முன்னே 5 வயது மகன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏரிக்கரையில் பிள்ளைகள் 3 பேருடன் தாய் சத்யா பீடி சுற்றிக் கொண்டிருந்தபோது, அவரது 5 வயது மகன் சரண் எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தான்.
சிறுவனைக் காப்பாற்ற அவனது அக்கா பிரியதர்ஷினியும், பின் தாய் சத்யாவும் ஏரியில் குதித்தனர். இதில் மகளைத் தாய் மீட்ட நிலையில், சிறுவன் சரண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.