சார்ஜ் செய்யும் போது திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக் - திருப்பத்தூரில் அதிர்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் சார்ஜ் செய்யும் போது திடீரென தீப்பற்றி எரிந்தது. சபீக் அஹமது என்பவரின் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், மற்றொரு வாகனத்திற்கும் தீ பரவியது. அப்போது அக்கம்பக்கத்தினர் தீயை போராடி அணைத்த நிலையில், இரண்டு இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின.