திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்... நீதிமன்றம் போட்ட உத்தரவு
கோயில் பழக்க வழக்கம், மரபுகளை பின்பற்றி திருச்செந்தூர் குடமுழுக்கு நேரம் முடிவு செய்யப்பட்டு உள்ளதா? என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பதிலாக மதியம் தோஷம் இல்லாத கும்பாபிஷேகம் நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரணை செய்த நீதிபதிகள், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளனர்.