உயிருக்கு அச்சுறுத்தல் - தி.மு.க கவுன்சிலர் புகார்
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சேலம் மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள மனுவில், முன்விரோதம் காரணமாக தன்னை கொல்ல சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதுடன், தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தி.மு.க கவுன்சிலர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, தி.மு.க கவுன்சிலரை, சிலர் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.